நிவாரணத் தொகைக்கான கால அவகாசம் நீட்டிப்பு!

தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை ஏப்ரல், மே மாதங்களில் உச்சம் பெற்றிருந்தது. அதில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக ஊரடங்கு உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டது.
இதனால், மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால், தமிழகத்தின் தலைவராக மு.க. ஸ்டாலின் பதவியேற்ற பின் கொரோனா நிவாரண நிதியாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
அவை இரண்டு தவணைகளாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. முதல் தவணை கொடுத்து முடிக்கப்பட்டிருந்த நிலையில், அதைத் தொடர்ந்து இரண்டாம் தவணையில், 2000 ரூபாய் ரொக்கத்துடன் சேர்ந்து 14 வகையான மளிகை பொருட்களும் வழங்கப்பட்டன.
ஆனால், அனைவராலும் இரண்டாவது தவணையை வாங்க முடியவில்லை. எனவே, கொரோனா நிவாரண தொகையான 4000 ரூபாயை இதுவரை பெறாதவர்கள் வரும் ஜூலை 31ஆம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளலாம் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.