சென்னைக்கு வரும் கோவிஷீல்டு தடுப்பூசிகள்…தடுப்பூசி தட்டுப்பாடு தீருமா?

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக மக்கள் அனைவரும் தங்களை பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். ஆனால், மத்திய அரசிடம் இருந்து போதுமான தடுப்புசிகள் கிடைக்காததால் பல மாநிலங்களில் தடுப்பூசிக்கு தட்டுபாடு நிலவுகிறது.

தடுப்பூசிக்கான விழிப்புணர்வுடன் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வமாக இருந்தாலும் தடுப்பூசிகள் இல்லாத நிலை நீடிக்கிறது.

நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனேவிலிருந்திலிருந்து 3,12,000 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன.இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு 4,81,310 கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று மாலை விமானம் மூலம் சென்னை வர உள்ளது. 

கொரோனா மூன்றாவது அலை இன்னும் சில வாரங்களில் இந்தியாவை பாதிக்கும் என உலக சுகாதாதர நிறுவனம் எச்சரித்துள்ள நிலையில் தடுப்பூசி செலுத்திக் கொள்வது தான் தொற்று பாதிப்பில் இருந்து மீள ஒரே வழி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பொறியியல் கலந்தாய்வு ! 26ல் ரேங்க் லிஸ்ட் ரிலீஸ் ! பிஇ, பிடெக் படிக்க 2.24 லட்சம் பேர் விண்ணப்பம்..

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி இளநிலைப் பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம்…