குஷ்புவின் கணக்கை முடக்கியது யார்? ட்விட்டரிடம் விளக்கம் கேட்கும் சைபர்கிரைம்!

அண்மையில் நடிகை மற்றும் பாஜக வேட்பாளருமான குஷ்புவின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. யார் இந்த செயலில் ஈடுபட்டார் என்பதை இன்னும் தெரியவில்லை.
இது குறித்து நடிகை குஷ்பு காவல் துறையினரிடம் கடந்த 20-ஆம் தேதி புகார் அளித்துள்ளார்.
நடிகை குஷ்பூ அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை சைபர் கிரைம் போலீஸ் ட்விட்டர் நிறுவனத்திடம் குஷ்புவின் ட்விட்டர் கணக்கை முடக்கியது யார் என கேள்வி எழுப்பியுள்ளது.
தன்னுடைய இந்த புகாரில் நடிகை குஷ்பூ ட்விட்டர் நிறுவனத்திடம் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்தும் பயனில்லை என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.