தடுப்பூசி விநியோக சிக்கலுக்காக மன்னிப்பு கேட்கும் பிரதமர்!
உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவின் பிடியில் சிக்கி தத்தளித்து வருகின்றன. கொரோனாவை வெல்லும் பேராயுதமாக தடுப்பூசி செலுத்துவதே பார்க்கப்படுகிறது.
அதன் காரணமாக தடுப்பூசி செலுத்தும் பணியை உலக நாடுகள் தீவிரப்படுத்தியுள்ளன. ஆனால், தடுப்பூசி விநியோக சிக்கலுக்காக மக்களிடம் பிரதமரே மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் தடுப்பூசி போடும் பணிகள் குறைந்த காரணத்தால், சிட்னி உள்ளிட்ட அந்நாட்டின் முக்கியமான சில இடங்களில் கொரோனா வேகமாக பரவிவருகிறது. இதற்காக ஆஸ்திரேலிய பிரதமர் மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
இப்போதுவரை ஆஸ்திரேலியாவில் 11% சதவிகிதம் மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது, பணக்கார நாடுகள் அனைத்தின் பட்டியலுடனும் ஒப்பிடும்போது மிக மிக குறைவாக இருக்கிறது.
தங்களின் இந்த விநியோகம் குறித்து பேசியிருக்கும் அதிபர், இந்தாண்டு தொடக்கத்தில், எத்தனை சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி விநியோகப்பட்டிருக்கும் என சில திட்டமிடல்களை நாங்கள் வகுத்திருந்தோம். ஆனால் இப்போது அதை எங்களால் எட்டமுடியவில்லை. அதற்காக நான் மன்னிப்பு கோருகிறேன் என தெரிவித்துள்ளார்.