தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு கவலை இல்லை… அமைச்சர் உறுதி
தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1,901 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25லட்சத்து 39ஆயிரத்து 277 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.நேற்று 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்த நிலையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளது.
இதனால், அடுத்த மூன்று நாட்களுக்குத் தடுப்பூசி தட்டுப்பாடு இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தமிழகத்துக்கு மேலும் 10 கோடி தடுப்பூசிகள் தமிழகத்திற்கு தேவைப்படுகிறது. இலவசமாக போடப்படும் தடுப்பூசிகளையே பொதுமக்கள் அதிகம் விரும்புகின்றனர். சிஎஸ்ஐஆர் பங்களிப்புடன் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.