நாங்க தான் அதிக தடுப்பூசி செலுத்துறோம்… எடப்பாடிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர்!

அண்மையில் கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளும் திமுக அரசின் மீது குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தார்.
அதில், திமுக அரசு தடுப்பூசி செலுத்துவதில் வேகம் குறைவாக செயல்படுவதாகவும், தடுப்பூசி செலுத்துவது தொடர்பான வெள்ளை அறிக்கை ஒன்றை அரசு வெளியிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருந்தார்.
தற்போது,அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியுள்ளார்.
அதிமுக ஆட்சிக்காலத்தை விட தற்போது நாள்தோறும் சராசரியாக ஒரு லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருவதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும், வெள்ளை அறிக்கை வேண்டும் என்றால் நிதிநிலை அறிவிப்பு வெளியாகும் போது வெள்ளை அறிக்கை தரவும் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.