தமிழகத்திற்கு அதிக தடுப்பூசிகள் வழங்க கோரிக்கை!
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது. மேலும், தடுப்பூசி செலுத்தும் பணியை தமிழக அரசு துரிதப்படுத்தி உள்ளது.
தடுப்பூசிகள் அதிகமாக போடப்பட்டு வருவதால் தமிழகத்தில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது. மக்கள் தடுப்பு செலுத்திக் கொள்ள ஆர்வமாக இருந்தாலும் சில நேரங்களில் கைவசம் தடுப்பூசி இல்லாத காரணத்தால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
இந்நிலையில், தமிழகத்திற்கு அதிக தடுப்பூசி வழங்க வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டயாவிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மாண்டியாவை சந்தித்து இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
மேலும், இந்த சந்திப்பில் 11 மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை போன்ற 13 அம்ச கோரிக்கையை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் ஒப்படைத்தார்.