கொரோனா நிவாரண நிதி வழங்கிய வைகைப்புயல்!
தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை தற்போது குறையத் தொடங்கியுள்ளது. கொரோனாவை கட்டுக்குள் வைக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து, பலரும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற உதவியினை செய்து வந்தனர்.
அந்த வரிசையில் தற்போது பிரபல நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலு தனது பங்கிற்கு முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சத்தை வழங்கியுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து 5 லட்சத்துக்கான காசோலையை வடிவேலு வழங்கினார்.