வெவ்வேறு நிறுவனங்களின் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டாம்… எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!

கொரோனா பரவல் கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகளை ஆட்டிப் படைத்து வருகிறது. கொரோனாவை வெல்லும் பேராயுதமாக தடுப்பூசி செலுத்துவதே பார்க்கப்படுகிறது.
அதன் காரணமாக, உலக நாடுகள் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன. இருப்பினும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் பலரும் தயக்கம் காட்டி வருகின்றனர்.
மேலும், இரண்டு தவணை தடுப்பூசிகளை வெவ்வேறு நிறுவனங்களின் தயாரிப்புகளை செலுத்திக் கொள்ளலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், இன்று உலக சுகாதார நிறுவனத்தின் விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் வெவ்வேறு நிறுவனங்களின் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வது குறித்த தகவலை அறிவித்துள்ளார்.
அதில், வெவ்வேறு நிறுவனங்களின் தடுப்பூசிகளை மாற்றிப் போட்டுக் கொள்வது ஆபத்தான போக்கு என அவர் தெரிவித்துள்ளார். மேலும், இவ்வாறு போட்டுக் கொள்வதன் மூலம் ஏற்படும் விளைவு குறித்து முழுமையாக தகவல் ஏதும் இல்லை எனவும் அவர் எச்சரித்துள்ளார்.