தஞ்சையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனையடுத்து, தமிழக அரசு ஏற்கனவே நடைமுறையில் இருந்த கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி ஊரங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 100-க்கும் குறைவான அளவில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இருப்பினும், டெல்டா மாவட்டமான தஞ்சாவூரில் நாள் ஒன்றுக்கு 200-க்கும் அதிகமாக மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை சரிவர கடைபிடிக்காததே காரணம் ஆகும்.
கொரோனா விதிகளை முறையாக பின்பற்றாததே தொற்று மீண்டும் அதிகரிக்க காரணம் என இந்திய மருத்துவ சங்க முன்னாள் தலைவர் டாக்டர் மோகன்தாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், பொது இடங்களில் கூட்டம் கூடினால் கொரோனா மூன்றாவது அலையைத் தடுக்க முடியாது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.