கூட்டம் கூடினால் 3-வது அலையை தடுக்க முடியாது…ஐசிஎம்ஆர் எச்சரிக்கை!

கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் மக்கள் பொது இடங்களில் கூட்டம் கூடினால் மூன்றாவது அலையைத் தடுக்க முடியாது என மத்திய மருந்து ஆராய்ச்சி கழகம் எச்சரித்துள்ளது.
பொதுமுடக்கத்தில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளில் மக்கள் சுற்றுலா, புனித யாத்திரை என பொது இடங்களில் அதிக அளவில் கூடுவதாகவும், அதைத் தவிர்த்திடுமாறும் இந்திய மருத்துவக் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது. கொரோனா அச்சத்தை மறந்து மக்கள் பொது இடங்களில் கூடுவதைத் தடுக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் குறைந்து வரும் இந்த சூழலில் மக்கள் எந்தவித பயமுமின்றி பொது இடங்களில் கூடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.