கொரோனா விதிமுறைகளை அலட்சியப்படுத்தும் பொதுமக்கள்… மத்திய அரசு வேதனை!

கொரோனா விதிமுறைகளை பொதுமக்கள் சரியாக பின்பற்றுவதில்லை என மத்திய அரசு வேதனை தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் சரிவர விதிமுறைகளை கடைபிடித்தால் தான் தளர்வுகளை அறிவிக்க முடியும். அரசாங்கம் மக்களுக்காக தளர்வுகளை அறிவிக்கும் போது மக்கள் விதிமுறைகளை மீறி வருவதால் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இது குறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லவ் அகர்வால் கூறியதாவது, மலைப்பிரதேசங்களுக்கு பயணம் மேற்கொள்வோர் கொரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றபடுவதில்லை. கொரோனா நெறிமுறைகள் பின்பற்றப்படாதது தொடர்ந்தால் தளர்வுகள் ரத்து செய்யப்படும். இதுவரை கிடைத்த பலனெல்லாம் தற்போதைய விதிமீறல்களால் அழிந்துவிடும் எனத் தெரிவித்தார்.
மேலும், நாட்டில் 24 சதவீதம் பேர் முக கவசம் அணிவது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.