ஊடகவியலாளர்களுக்கு ஜூலை 6 முதல் தடுப்பூசி முகாம்!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணத்தால் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தடுப்பூசி செலுத்துவதில் முன் களப் பணியாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது சமீபத்தில் ஊடகவியலாளர்கள் முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
தற்போது, முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்ட செய்தியாளர், ஊடகவியலாளர்களுக்கு வருகிற ஜூலை 6 முதல் தடுப்பூசி முகாம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மருத்துவத் துறை மற்றும் மாநகராட்சி இணைந்து நடத்தும் இந்த தடுப்பூசி முகாம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது வெளியிட்டுள்ளார்.