தங்க மாஸ்க் அணிந்து வலம் வரும் நபர்… ஆச்சர்யத்துடன் பார்க்கும் மக்கள்!

கொரோனா பரவல் நாட்டு மக்களை பெரிதும் அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பரவலைத் தடுக்க அரசாங்கம் வலியுறுத்தி வருவதில் முகக் கவசம் அணிவதும் ஒன்று.
கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பலரும் முகக் கவசம் அணிந்து வருகின்றனர். ஆனால், உத்தரபிரதேசத்தில் மனோஜ் சின்ஹ ஒருவர் முகக் கவசம் அணிந்து வரும் விதம் மக்கள் அவரை ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர். அதற்கு காரணம் அவர் தங்கத்தில் மாஸ்க் அணிந்து வருவதே ஆகும்.
தங்க பாபா என அப்பகுதி மக்களால் அழைக்கப்படும் மனோஜ் சின்கார் என்பவர், தங்க முகக்கவசத்திற்காக ஐந்து லட்சம் ரூபாய் வரை செலவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த பல மாதங்களாகவே கொரோனாவில் இருந்து தப்பிக்க தங்க முகக்கவசத்தை அணிந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த தங்க மாஸ்க், மூன்று வருடங்கள் வரை நீடிக்கும். மிகவும் பாதுகாப்பாக தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த மாஸ்க், மூன்றடுக்கு பாதுகாப்பு கொண்டது. ஆகவே எவ்வித பிரச்னையும் இதில் ஏற்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.