மத்திய அரசு வழங்கும் தடுப்பூசிகள் ஒரு நாளைக்கு கூட பத்தாது… சுகாதாரத்துறை செயலர் அறிவிப்பு!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.
கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் மத்திய அரசு தமிழகத்திற்கு 2 லட்சம் தடுப்பூசிகள் வழங்க உள்ளதாக சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஆனால், மத்திய அரசு வழங்கும் இந்த இரண்டு லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்தின் ஒரு நாள் தேவைக்குக் கூட பத்தாது என அவர் தெரிவித்துள்ளார்.