தமிழகத்தில் நாளை முதல் பேருந்துகள் இயக்கம்!

தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை தீவிரமாக வீசி வந்தது. இந்நிலையில், தற்போது அதன் தீவிரம் குறைய தொடங்கியுள்ளது.
இதனையடுத்து, தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. ஏற்கனவே சென்னை,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பொதுப்போக்குவரத்து அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது வகை இரண்டில் உள்ள 27 மாவட்டங்களிலும் பொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை முதல் 9333 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். மேலும், தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.