தடுப்பூசி போடுங்க இல்லனா இந்தியாவுக்கு போங்க… எச்சரிக்கும் பிலிப்பைன்ஸ் அதிபர்!

கொரோனா பரவல் உலக நாடுகளை புரட்டி எடுத்து வருகிறது.
உலகின் பல நாடுகளும் கொரோனாவின் இரண்டாவது அலையை சந்தித்து வருகின்றன.
இந்த கொரோனாவின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்தவும், மூன்றாவது அலையைத் தவிர்க்கவும் உலக நாடுகள் போராடி வருகின்றன.
நோய் பரவலை கட்டுக்குள் வைக்க உலகின் பல நாடுகளும் வித்தியாசமான முயற்சிகளை கையாண்டு வருகின்றன. தற்போது பிலிப்பைன்ஸ் அதிபர் கொரோனா தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அதிலும் இது போன்ற வித்தியாசமான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த எச்சரிக்கை என்னவென்றால் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் இல்லை என்றால் இந்தியாவுக்கு போங்க என அவர் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா தடுப்பூசி போட விரும்பாதவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.