அக்டோபரில் உச்சம் தொடும் கொரோனா மூன்றாவது அலை…ஐஐடி கான்பூர் ஆய்வில் தகவல்!

கொரோனா 2-வது அலை நாட்டில் தீவிரமாக வீசி வந்த நிலையில் தற்போது அதன் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளது.
கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் முன்னரே இந்த மூன்றாவது அலை எச்சரிக்கை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மூன்றாவது அலை குறித்து ஐஐடி கான்பூர் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதன் முடிவில், கொரோனா மூன்றாவது அலை, இவ்வருடம் செப்டம்பர் – அக்டோபரில் உச்சத்தை தொடுமென கணிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது, மூன்றாவது அலை ஏற்படுத்தவிருக்கும் தாக்கம் குறித்த பயம், பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் அதிகமாக இருக்கிறது. அந்த பயத்தை போக்க எண்ணி, நாங்கள் ஆய்வொன்று தொடங்கினோம். அதற்காக எஸ்.ஐ.ஆர். என்ற மாடலின் மூலம், இரண்டாம் அலையின் முடிவு குறித்த சில முன்முடிவுகளை கணித்து, மூன்றாவது அலை எப்போது ஏற்படுமென ஆராய்ந்தோம்.
அப்படி, இரண்டாம் அலை எப்போது முடிவுக்கு வருமென்பது குறித்து நாங்கள் எடுத்த முடிவுகளில் முக்கியமானது ஜூலை 15 ம் தேதி, இந்தியா முழுக்க பொதுமுடக்க தளர்வுகள் முடிவுக்கு வந்துவிடும் என்பது. அப்படி நடந்தால் பொதுமக்கள் அனைவரும் ஒரேநேரத்தில், இயல்புக்கு திரும்புவார்கள். அப்படி ஜூலையின் பிற்பகுதியில், இந்தியா இயல்புக்கு திரும்பும்போது, அதன் விளைவாக
அக்டோபரில், மூன்றாவது அலை கொரோனா இந்தியாவில் உச்சத்தை அடையும். இருந்தாலும், இரண்டாவது அலை அளவுக்கு அது அதிகமாக இருக்காது.
அக்டோபருக்கு முன்னராக செப்டம்பரில், இரண்டாவது அலையை மிஞ்சும் அளவுக்கான மூன்றாவது அலை பாதிப்பு, மிக அதிகமாக ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.