கொரோனாவால் இறந்தவர்களை மின்மயானங்ளுக்கு ஏற்றிச்செல்லும் கல்லூரி மாணவி!

கொரோனா என்னும் கொடிய நோய் நாட்டையே புரட்டி எடுத்து வருகிறது. இந்த கொரோனா காலகட்டத்தில் பல்வேறு சமூக ஆர்வலர்களும் மற்றும் தன்னார்வலர்களும் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மகத்தான சேவையை அளித்து வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் விவேகானந்தா கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் பிரியா பாட்டில், தனது ஆன்லைன் வகுப்பு நேரம் போக, உறவினர்களே நெருங்க அச்சப்படும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை ஆம்புலன்ஸில் ஏற்றி மின் மயானங்களுக்கு கொண்டு செல்லும் பணியை தன்னார்வலாக செய்துவருகிறார். அதாவது, அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளிலிருந்து கொரோனாவில் உயிரிழந்தவர்களின் உடல்களை ஆம்புலன்ஸில் ஏற்றுவதோடு இவரே ஆம்புலன்ஸை ஓட்டிச்சென்று மயானங்களில் ஒப்படைக்கிறார்.
கல்லூரி மாணவி பிரியா பாட்டிலின் இருந்த செயல் பலரையும் நெகழ்ச்சி அடைய செய்துள்ளது. இது குறித்து பேசிய பிரியா பாட்டில், பெற்றோர்களின் ஆதரவு இருப்பதால் தான் இந்த மகத்தான சேவையை தன்னால் செய்ய முடிகிறது எனவும், இந்த சேவை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் கூறினார்.
மேலும் பேசிய அவர், முதலில் பாதுகாப்பு கவச உடை அணிந்து ஆம்புலன்ஸை இயக்கும்போது பதற்றமாக இருந்தது. ஆனால், பின்பு எந்தவித பயமுமின்றி இந்த சேவையை செய்து வருவதாக அவர் கூறினார்.