புதுச்சேரியில் டாஸ்மாக்கை எதிர்த்து போராட்டம் நடத்துங்கள்…மருத்துவத் துறை அமைச்சர்!

தமிழகத்தில் கொரோனா பரவல் ஊரடங்கு தளர்வுகள் 2 நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.

அதில், டாஸ்மாக் கடைகள் கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து பாஜகவினர் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கொரோனா பரவலின் போது டாஸ்மாக் கடைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது ஏன் என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக தற்போது சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியுள்ளார்.

புதுச்சேரியில் டாஸ்மாக் கடைகள் திறப்பை எதிர்த்து பாஜகவினர் போராட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த ஆட்சியில் கொரோனா உச்சத்தில் இருந்த போதும் டாஸ்மாக் கடைகள் திறந்திருந்ததே? எனவும் வினவியுள்ளார்.

மேலும் பேசிய அவர், தமிழகம் மீது பாஜகவிற்கு உண்மையாக அக்கறை இருந்தால் மத்திய அரசிடமிருந்து கொரோனா தடுப்பு மருந்துகளை பெற்றுத்தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாடு அமைதியை குழைக்கும்  சீமான் மீது போலீசில் வழக்கறிஞர் புகார் 

திருச்சி மாவட்டம், மணப்பாறை டிஎஸ்பி ராமநாதனிடம், அரசு வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன் அளித்துள்ள புகாரில், …

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றம்… சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன்

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது என கரூர்…