பெண்களுக்கு விடியல் தாங்க ஸ்டாலின்… சட்டமன்ற உறுப்பினர் வேண்டுகோள்!

நேற்று முன்தினம் தமிழக அரசு சார்பில் கொரோனா பொது முடக்கத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதில், கொரோனா குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் செயல்படுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், டாஸ்மாக்கை நிரந்தரமாக மூடக்கோரியும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தை தொண்டர்கள் அவரவர் வீடுகள் முன்பு நின்று இன்று நடத்தி வருகின்றனர்.

இதன்படி கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் தமிழக அரசே டாஸ்மாக்கை திறக்காதே எனும் வாசகங்களுடன் கூடிய பதாகை ஏந்தி தனது வீட்டின் முன்பு போராட்டம் செய்தார்.

மேலும், டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூடி பெண்களுக்கு விடியல் தாங்க ஸ்டாலின் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *