கொரோனா பாதித்த முதியோர்களுக்கு திரவ உணவு கொடுங்கள்…மருத்துவர்கள் அறிவுரை!

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக வீசி வருகிறது.

கொரோனாவால் பலரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், முதியோர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள்.

கொரோனாவால் பாதிக்கப்படும் முதியவர்களுக்கு எந்த மாதிரியான உணவுகள் கொடுக்க வேண்டுமென மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

60 வயதைக் கடந்தோருக்கு இயல்பாகவே மற்றவர்களைப் போல் பூரி , பொங்கல் என வழக்கமான உணவுகளை உண்ணுதல் ஏற்புடையதல்ல எனும் போது கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மூச்சுவிட சிரமமான நிலையில் இருக்கும் போது திரவ உணவுகள் தான் தேவைப்படுகின்றன. அதனால் மருத்துவர்கள் முதியோருக்கு திரவ உணவுகள் கொடுக்குமாறு அறிவுரை கூறி வருகின்றனர்.

மருந்தும் சிகிச்சையும் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு வயதான நோயாளிக்கு தேவையான சத்தான உணவு கிடைப்பதும் பிரதானம். ஆரோக்கியமான சத்தான உணவு கிடைப்பது இறப்பு விகிதத்தை குறைக்க உதவும் என்பதும் மருத்துவர்கள் அறிவுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாடு அமைதியை குழைக்கும்  சீமான் மீது போலீசில் வழக்கறிஞர் புகார் 

திருச்சி மாவட்டம், மணப்பாறை டிஎஸ்பி ராமநாதனிடம், அரசு வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன் அளித்துள்ள புகாரில், …

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றம்… சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன்

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது என கரூர்…