அத்தியாவசிய பொருட்களுக்கு விலை நிர்ணயித்து தமிழக அரசு!

இந்த கொரோனா காலகட்டத்தில் அத்தியாவசியப் பொருட்களான மாஸ்க், கிருமிநாசினி உட்பட 15 பொருட்களுக்கு தமிழக அரசு விலை நிர்ணயித்துள்ளது.
3 வெவ்வேறு வகை கொண்ட சர்ஜிக்கல் மாஸ்க்கிற்கு 3 ரூபாய், 4 ரூபாய், 4.50 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
N95 மாஸ்க்கிற்கு 22 ரூபாயும், சானிடைசர் 220ml பாட்டில் 110 ரூபாயாகவும், பிபிஇ கிட் 273 ரூபாயாகவும், ஆக்ஸிஜன் மாஸ்க் 54 ரூபாய் மற்றும் பல்ஸ் ஆக்சிமீட்டர் 1500 ரூபாயாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.