வண்டலூர் பூங்காவில் முதலமைச்சர் ஆய்வு!
வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
நேற்று, சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. நீலா என்ற பெண் சிங்கம், கடந்த 3 ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு நேரில் சென்றார். அங்கிருந்து அதிகாரிகளுடன் சிறிது நேரம் ஆலோசனையில் ஈடுபட்ட அவர், பின்னர் பேட்டரி காரில் சிங்கங்கள் உள்ள பகுதிக்குச் சென்றார்.
சிங்கங்களின் உடல்நிலை குறித்து முதல்வர் கேட்டறிந்தார். மேலும், சிங்கங்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்தும் அவர் ஆலோசனையில் ஈடுபட்டார்.