தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசி வழங்கும் மத்திய அரசு!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்துவதே முக்கிய தீர்வாக பார்க்கப்படுகிறது.
ஆனால், நாட்டில் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவுவதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், இன்று மத்திய அரசு தமிழகத்திற்கு வருகிற ஜூன் 15 முதல் ஜூன் 30 வரை 18 லட்சம் கூடுதல் தடுப்பூசிகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
மேலும், ஜூன் 2-ஆம் தேதி நிலவரப்படி மத்திய அரசு தமிழகத்திற்கு ஒரு கோடி தடுப்பூசிகள் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்தில் சுமார் 7 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பிற மாநிலத்திலும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு எதுவும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.