ஊரடங்கை மேலும் நீட்டிக்கும் கர்நாடகா!

கொரோனா பரவலின் காரணத்தால் இந்திய மாநிலங்கள் பலவும் முழு ஊரடங்கு கட்டுப்பாட்டினை அமல்படுத்தியுள்ளன.

கர்நாடகாவிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. கர்நாடகாவில் வருகிற ஜூன் 7-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு போடப்பட்டிருந்த நிலையில் தற்போது ஊரடங்கை வருகிற ஜூன் 14-ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த முழு ஊரடங்கு கொரோனா பரவலைப் பொறுத்து வருகிற ஜூன் 21-ஆம் தேதி வரை நீட்டிக்கவும் வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா முழு ஊரடங்கில் காலை 6 மணிமுதல் 10 மணிவரை மட்டுமே பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே வர அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *