அனைவருக்கும் தடுப்பூசி என்பது புரளி…மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கொரானாப் பரவலை கட்டுக்குள் வைக்க தடுப்பூசி செலுத்துவதே முக்கிய தீர்வாக பார்க்கப்படுகிறது.
மத்திய,மாநில அரசுகளும் தடுப்பூசி செலுத்தும் வேகத்தை அதிகப்படுத்தியுள்ளன.
சமீபத்தில் மத்திய அரசு வருகிற டிசம்பர் மாதத்திற்குள் இந்தியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த தடுப்பூசி குறித்த அறிவிப்பை வெறும் புரளி என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், மத்திய அரசு மாநிலங்களுக்கு தடுப்பூசி அனுப்பி வைப்பதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
முதலில் தடுப்பூசியை வாங்கி மாநிலங்களுக்கு இலவசமாக வழங்குங்கள் என மம்தா பானர்ஜி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.