இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு

இந்தியாவில், பரவி வந்த கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், தற்போது அதன் பாதிப்பு குறைந்து வருவது மக்களிடம் நிம்மதியை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த மாதம் நான்கு லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேர பாதிப்புகள் குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், ’ புதிதாக 1,32,788 லட்சம் பேர் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,83,07,832 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 3,207 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,35,102 ஆக உயர்ந்துள்ளது. 

தொற்றில் இருந்து ஒரே நாளில் 2,31,456 பேர் குணமடைந்துள்ளனர். இதன் காரணமாக, நாட்டில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,61,79,085 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 17,93,645 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *