ஜூன் 15 வரை ஊரடங்கை நீட்டிக்கும் இந்திய மாநிலம்!

நாட்டில் கொரோனா பரவலின் வேகம் சற்றுக் குறைந்துள்ளது. இருப்பினும் சில மாநிலங்களில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரிப்பதால் ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே வருகின்றன.
இன்று கொரோனா பரவலை தடுக்க மகாராஷ்டிர மாநிலத்தில் ஜூன் 15ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப் படுவதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு 2 லட்சத்திற்கும் அதிகமானோர் மாநிலத்தில் சிகிச்சை சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா மூன்றாவது அலையைத் தடுக்க இந்த ஊரடங்கு நீட்டிக்கப் படுவதாகவும், மக்கள் அரசிற்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், கொரோனா பரவல் விகிதம் 10 விழுக்காட்டிற்கு கீழ் உள்ள பகுதிகளில் மட்டும் அத்தியாவசிய கடைகள் திறந்திருக்கும் நேரத்தை அதிகரிப்பதாக உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் விகிதம் 20 சதவிகிதத்திற்கு மேல் உள்ள மாவட்டங்களுக்கு உள்ளே செல்லவோ, வெளியே செல்லவோ யாருக்கும் அனுமதி இல்லை என அவர் அறிவித்துள்ளார்.