ஆந்திராவில் மேலும் நீட்டிக்கப்படும் ஊரடங்கு!

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஆந்திர மாநிலத்தில் ஊரடங்கு வருகிற ஜூன் 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் இதுவரை 16 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக 10 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா 2-ஆம் அலையில் மிக அதிகமாக கிழக்கு கோதாவரி மாவட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகளும், தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
ஜூன் 10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை அத்தியாவசியப் பொருள்களுக்கான கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.