கொரோனா நோயாளிகளிடம் நலம் விசாரித்த முதல்வர்!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு அதிகரித்துக்கொண்டே வருகிறது.

தினசரி கொரோனா பாதிப்பு சென்னையில் அதிகமாக பதிவாகி வந்த நிலையில் தற்போது கோவை சென்னையை பின்னுக்கு தள்ளி கொரோனா பரவலில் முதலிடத்தில் உள்ளது.

திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து இம்மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார். திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்குச் சென்ற அவர் இறுதியாக கோவை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். கோவையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் பிபிஇ கிட் பாதுகாப்பு உடை அணிந்து நேரில் சென்று கொரோனா நோயாளிகளிடம் நலம் விசாரித்து சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். 

மேலும், கோவை மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் சேவையையும் தொடங்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாடு அமைதியை குழைக்கும்  சீமான் மீது போலீசில் வழக்கறிஞர் புகார் 

திருச்சி மாவட்டம், மணப்பாறை டிஎஸ்பி ராமநாதனிடம், அரசு வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன் அளித்துள்ள புகாரில், …

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றம்… சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன்

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது என கரூர்…