சென்னையில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள்!

தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணத்தினால் மதுபான கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பலரும் அதிக அளவில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.

இன்று சென்னை திருமங்கலத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1500 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

சென்னை திருமங்கலம் தங்கம் காலனி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக அண்ணாநகர் துணை ஆணையர் ஜவகருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் ராஜாசிங் தலைமையில் தங்கம் காலனியில் உள்ள அந்த வீட்டிற்கு சென்று காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின்போது கர்நாடகாவைச் சேர்ந்த உயர்ரக மது பாட்டில்கள் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதை காவல்துறையினர் கண்டறிந்தனர்.

காவல்துறையினரை கண்டதும் அந்த வீட்டில் இருந்த கணவன், மனைவி இருவரும் தலைமறைவாகினர். அவர்களை தேடி பிடிக்க காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *