தமிழகத்தில் நீட்டிக்கப்படும் ஊரடங்கு!

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா இரண்டாவது அலைப் பரவலைத் தடுப்பதற்காக மே 10 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஒரு வார காலமாக தளர்வுகளற்ற முழு ஊரங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
ஒரு வார ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில், ஜூன் 7 ஆம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலைச்சர் அறிவித்தார்.
இது குறித்து பேசியுள்ள முதலமைச்சர், “ஊரடங்கின் காரணமாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. ஒரு வார கால ஊரடங்கினால் தொற்று பாதிப்பு குறைந்து வருவதால், நோய்த் தொற்று மேலும் குறைய வேண்டும் என்பதற்காக ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது” எனக் கூறியுள்ளார்.