இரண்டாவது நாளாக இரண்டு லட்சத்திற்கும் கீழ் பாதிப்பு எண்ணிக்கை

இந்தியாவில், கொரோனா இரண்டாவது அலையில், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உலக நாடுகளே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு மோசமாக சென்று கொண்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, அந்தந்த மாநிலங்களில் உள்ள தொற்று பரவலுக்கேற்ப தனித்தனியாக பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றிக் கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதியளித்தது.

இதனால், கொரோனா தொற்று பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் ஊரடங்கு உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டது.

இந்நிலையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக இரண்டு லட்சத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,73,790 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,77,29,247ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 2,84,601 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியதைத் தொடர்ந்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,51,78,011 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 22,28,724 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 3,617 பேர் உயிரிழந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *