அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் கொரோனாவால் பலி

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையில் உயிர்பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இரண்டு முறை பணியாற்றிய அனந்தகிருஷ்ணன், கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.
93 வயதாகும் இவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனில்லாமல் இன்று இறந்துள்ளார்.