தமிழக அரசை குற்றஞ்சாட்டும் வானதி சீனிவாசன்

தமிழகத்தில், கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. அதிலும், சில மாவட்டங்களில் தொற்றின் பாதிப்பு அதிகமாக இருக்குறது.
தமிழகத்தில் தொற்று பாதிப்பு அதிகம் இருக்கும் மாவட்டங்களின் பட்டியலில் சென்னையை பின்னுக்குத் தள்ளி கோவை மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
கோவையில் 4,734 பேருக்கு, கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏவும், பாஜகவின் மாநில மகளிரணித் தலைவியுமான வானதி சீனிவாசன் தமிழக அரசின் மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.
மாநில அரசுகள் கைவசம் உள்ள தடுப்பூசிகளை மாநிலங்களுக்குக் கொடுக்காமல் மத்திய அரசிடம் தொடர்ந்து கேட்டுக் கொண்டு மட்டும் இருக்கிறார்கள். தமிழக அரசு கோவைக்குத் தினமும் முப்பதாயிரம் மக்களுக்குத் தடுப்பூசி போடும் அளவிற்கு மருந்துகளை ஒதுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், கொரோனா தடுப்பூசிகளை வீணாக்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.