சென்னையை முந்தி முதலிடத்திற்கு வந்த கோவை! அவசர ஆலோசனை

தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 33,361 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சில மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

சென்னையில் தான் அதிக மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், சென்னையை பின்னுக்குத் தள்ளி கோவை தற்போது முதலிடத்திற்கு வந்துள்ளது.

சென்னையில்,  2,779 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் , கோவையில் 4,734 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . 

மேலும், 37,488 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 1,135 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால், தொற்று பரவலைத் தடுப்பதற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா . சுப்பிரமணியன், கோவை மாவட்ட ஆட்சியர்  , மாநகராட்சி ஆணையர் , கொரோனா சிறப்பு அதிகாரி ஆகியோருடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *