ஊரடங்கில் அம்மா உணவகங்களில் இலவச உணவு

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக மே 24 ஆம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் பல ஏழை எளிய மக்கள் உணவில்லாம் சிரமப்பட்டு வருகின்றனர்.

பலர் அம்மா உணவகங்களில் குறைந்த விலையில் உணவருந்தி வருகின்றனர். இந்நிலையில், கோவையில் அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும் என்றும் அதற்கான செலவுகளை திமுகவே ஏற்கும் என அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில்,’ கோயமுத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட ஐந்து மண்டலங்களில் உள்ள 12 அம்மா உணவகங்கள், பொள்ளாச்சி மேட்டுப்பாளையம் மற்றும் வால்பாறை ஆகிய நகராட்சிகளில் உள்ள 3 அம்மா உணவகங்கள் என 15 அம்மா உணவகங்களில் இலவசமாக இன்று முதல் உணவு வழங்கப்படும் . அதற்கு என்ன ஆகும் செலவினை தொகையினை திமுக வழங்கும்.

இந்த அம்மா உணவகங்களில் காலை உணவாக இட்லியும், மதிய உணவாக சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதமும் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தினசரி ஒவ்வொரு அம்மா உணவகங்களிலும் ஒரு நாளைக்கு 500 நபர்கள் வீதம், 15 அம்மா உணவகங்களில் 7500 நபர்கள் முதல் 10 ஆயிரம் நபர்கள் வரை உணவு உண்டு வருகின்றனர். இதற்கென மாதம் ஒன்றுக்கு தலா ஒரு அம்மா உணவகத்திற்கு ரூபாய் 3.50 லட்சம் வீதம், 15 அம்மா உணவகங்களுக்கு 52.5 லட்சம் செலவிடப்படும்

முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் உணவின்றி யாரும் சிரமப்படக் கூடாது என்ற உன்னத நோக்கில் 15 அம்மா உணவகங்களிலும் இலவசமாக பொதுமக்கள் ஏழை, எளியோர் சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கு உணவு வழங்கப்படும் எனவும் இதற்காக செலவாகும் தொகையை திமுக மூலம் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு வழங்கப்படும்’ என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவிட்டதாக ராணுவ வீரர் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்.

கிருஷ்ணகிரி அருகே சின்ன அக்ரஹாரம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் செந்தில் குமார்…

சத்தியமங்கலம்  மலைப்பகுதியில்  திடீரென்று தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு …

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி உகினியம் மலை கிராமத்தில் இன்று…