டிஆர்டிஓ கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தின் விலை என்ன தெரியுமா?

கொரோனாப் பரவலை கட்டுப்படுத்துவதற்கு நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி விரைந்து செலுத்தப்படுவதே ஒரே தீர்வாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் ஏற்கனவே இரண்டு தடுப்பூசிகள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியும் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்தது.

கொரோனாவைக் கட்டுப்படுத்த வாய் வழியாக உட்கொள்ளும் புதிய மருந்து ஒன்றை டிஆர்டிஓ கண்டுபிடித்தது.

தற்போது டிஆர்டிஓ கண்டுபிடித்த பவுடர் வடிவிலான கொரோனா எதிர்ப்பு மருந்து 2 டிஜியின் ஒரு பாக்கெட் விலை ரூ.990 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

இதன் விலை டாக்டர் ரெட்டி ஆய்வகத்தால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *