தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிரபல தமிழக கிரிக்கெட் வீரர்!

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நோய் பரவலுக்கு தடுப்பூசி செலுத்துவதே ஒரே தீர்வாக பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து பலரும் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

அந்த வரிசையில் இந்திய அணிக்காக விளையாடும் தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் தற்போது தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார்.

தடுப்பூசி செலுத்திக் கொண்டதை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

அந்த டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது,

இன்று காலை நான் தடுப்பூசி செலுத்திக் கொண்டேன். மக்களுக்கு தங்கள் உயிரை பற்றி கூட கவலைப்படாமல் அயராது உழைத்து வரும் சுகாதார பணியாளர்களுக்கு நன்றி. எல்லோரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என கேப்ஷன் கொடுத்துள்ளார் நடராஜன்.

இடது கை வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *