அவங்க அப்பா கூட என்ன கைது செய்ய முடியாது…மாஸ் காட்டும் பாபா ராம்தேவ்!

சமீபத்தில் யோகா குரு பாபா ராம்தேவ் அலோபதி மருத்துவம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார்.
கொரோனா சிகிச்சைக்கான அரசு வழிகாட்டுதல் மற்றும் தடுப்பூசி திட்டம் குறித்து அவர் தவறான பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி அவர் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்ய இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் மிகச் சிலரே பாதிப்புக்கு உள்ளாகின்றனர். ஆனால், பாபா ராம்தேவ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவர்களில் இதுவரை 10,000 பேர் இறந்துள்ளதாகவும் மற்றும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு அலோபதி மருத்துவம் எடுத்துக்கொண்ட லட்சக்கணக்கான மக்கள் இறந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதன் காரணமாக இந்திய மருத்துவ சங்கம் பாபா ராம்தேவ் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்து, கைது செய்யுமாறு வலியுறுத்தியது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக தற்போது பாபா ராம்தேவ் அவங்க அப்பா வந்தாலும் என்னை கைது செய்ய முடியாது எனக் கூறியுள்ளார்.