இந்தியாவில் உயரும் பலி எண்ணிக்கை

இந்தியாவில், கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தினசரி கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாகக் குறைந்து வருகிறது.
இது குறித்து, மத்திய சுகாதாரத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ‘ கடந்த 24 மணி நேரத்தில் 2,08,921பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 2.71 கோடி (2,71,57,795) ஆகவும் அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 24,95,591 பேராகவும் குறைந்துள்ளது.
ஒரே நாளில் கரோனா தொற்றால் 4,157 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,11,388 -ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,43,50,816-ஆக உயா்ந்துள்ளது. ஒரே நாளில் 2,95,955 குணமடைந்தனர். குணமடைந்தோரின் விகிதம் 89.99 சதவீக ஆக அதிகரித்துள்ளது. தொடர்ச்சியாக இரு தினங்களாக தொற்று பாதிப்பு சதவீதம் 10 சதவீதத்துக்கும் குறைவாக 9.42 சதவீதமாக உள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.