லாரிகளை தடுக்காதீர்கள்….முதல்வருக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் வேண்டுகோள்!

தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணத்தினால் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கின்றன.
இந்நிலையில், சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர்.
அதில், அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் லாரிகளை காவல்துறையினர் அனுமதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
உடுமலைப்பேட்டை, தாராபுரம், திருச்சி நெடுஞ்சாலைகளில் லாரிகளை போலீஸார் தடுப்பதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர்.
மேலும், லாரிகள் இயக்கம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றும் தமிழக அரசினால் வெளியிடப்படவில்லை என காவல்துறையினர் கூறுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் லாரிகளை அனுமதிக்க கோரி சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கம் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.