கொரோனாவுக்கு முன், கொரோனாவுக்கு பின் என்பதையே இனிவரும் காலம் பேசும்….பிரதமர் மோடி பேச்சு!

புத்த பூர்ணிமா தினத்தையொட்டி இன்றைய தினம் மத்திய கலாச்சார அமைச்சகம் சர்வதேச புத்த கூட்டமைப்புடன் இணைந்து காணொளி நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளது.
அதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, இனிவரும் காலம் முன்பு இருந்ததைப் போல் இயல்பாக இருக்காது எனவும் இனிவரும் காலத்தை கொரோனாவுக்கு முன் கொரோனாவுக்கு பின் இன்று கூறக்கூடிய நிலை உருவாகியுள்ளது என்றார்.
மேலும் பேசிய பிரதமர் மோடி, நம் முன்கள பணியாளர்கள் அனைவரும், ஒவ்வொரு நாளும் மற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக தங்கள் உயிரை பணயம் வைக்கின்றார்கள். அவர்களுக்கு என்னுடைய வணக்கங்கள். இந்த இக்கட்டான கொரோனா நேரத்தில் பணியாற்றி, கொரோனாவால் இறந்த முன்கள பணியாளர்களின் குடும்பங்களுக்கு, எனது இரங்கல்கள் எனப் பேசியுள்ளார்.
கடந்த ஆண்டு பல தனிநபர்களும், தன்னார்வு அமைப்புகளும் கொரோனாவை கட்டுப்படுத்த முன்வந்தன. அவற்றில் முக்கியமானவர்களாக இருப்பது, புத்த தர்மத்தை பின்பற்றும் உலகளாவிய மக்கள். பல புத்த நிறுவனங்கள், இந்தப் பேரிடரை சமாளிக்க நமக்கு உபகரணங்கள் கொடுத்து உதவியுள்ளன.
இந்த ஆண்டும் அதே போல் இந்தியாவிற்கு உதவி அளித்து வருகின்றனர் எனவும் அவர் பேசினார்.