ஆந்திர முதல்வரின் அதிரடி அறிவிப்பு!

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக சில மாநிலங்களில் பாதிப்பின் வேகம் அதிகமாக இருக்கிறது.

கொரோனா அதிகமாக பாதித்த மாநிலங்களில் ஆந்திரா, இந்தியாவிலேயே 6 ஆவது இடத்தில் உள்ளது. இதுவரை 15.93 லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களில் 13.79 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 10,222 பேர் உயிரிழந்த நிலையில் 2.03 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிலும், கிழக்கு கோதாவரி, பிரகாசம் ஆகிய மாநிலங்கள் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அங்கு தாய், தந்தை என இருவரையுமே கொரோனாவிற்கு பறி கொடுத்து விட்டு பல குழந்தைகள் அனாதையாக இருக்கின்றனர். அவர்களுக்காக, ஆந்திர முதல்வர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, அவர்களின் பெயரில் தனியாக வங்கிக்கணக்கு துவங்கப்பட்டு, தலால் 10 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என தெரிவித்தார். மேலும், கொரோனாவால் இறந்தவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்ய பதினைந்தாயிரம் ரூபாய் நிதி வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *