செல்லப்பிராணிகளை கைவிடாதீர்கள்…டெல்லி மருத்துவர் வேண்டுகோள்!
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவலால் மக்கள் பெரும் அச்சம் எழுந்துள்ளது.
சிலர் செல்லப் பிராணிகளிடம் இருந்து கொரோனா பரவுவதாகக் கூறி அவற்றைக் கைவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லி கால்நடை மருத்துவர் சந்தீப் சிங் செல்லப் பிராணிகளிடம் இருந்து கொரோனா பரவுவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், விலங்குகளிடமிருந்து கொரோனா பரவுகிறது என்பது வதந்தி எனவும், அதனை நம்பி வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளை கைவிடாதீர்கள் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், நோய்களால் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு சிகிச்சை அளித்த போதும் எனக்கு கொரோனா பாதிப்பு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.