அனுமதியின்றி கொரோனா சிகிச்சை மையம் அமைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – மதுரை மாவட்ட ஆட்சியர்
தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
கடந்த வாரங்களை ஒப்பிட்டு பார்க்கையில் கொரோனாவின் தாக்கம் கடந்த இரு தினங்களாக சற்று குறைந்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இருப்பினும் சில இடங்களில் கொரோனா சிகிச்சை மையம் அமைப்பதில் விதிமீறல்கள் காணப்படுகின்றன.
இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் மதுரை மாவட்டத்தில் அனுமதியின்றி கொரோனா சிகிச்சை மையம் அமைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
தனியார் மருத்துவமனை மற்றும் விடுதிகளில் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்க கூடாது எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.