ஊரடங்கு மட்டும் தான் தொற்று சங்கிலியை உடைக்கும் – சுகாதாரத்துறை அமைச்சர்

தமிழகத்தில், அதிகமாகப் பரவி வரும் கொரோனா இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்துவதற்காக, இன்று முதல் ஒரு வார காலத்திற்குத் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை ண்டி கிங் இஸ்டிட்யூட்டில் முன்களப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கினார். அங்கு, ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 104 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
பின்னர்ம் அமைச்சர் மற்றும் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய அமைச்சர், “ஆக்ஸிஜன் பற்றாக்குறையை போக்குவதற்காகப் பல இடங்களில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை அதிகரித்து வருகிறோம். சென்னையில் 37 இடங்களில் சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
சென்னையில், கொரோனா தொற்று உறுதியானவர்கள் நேரடியாக மருத்துவமனைக்கு வர வேண்டாம், எந்த இடத்துக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்று ஸ்கிரீன் சென்டர்கள் மூலம் அறிந்து கொண்டு அங்கு செல்ல வேண்டும் என தெரிவித்தார்.
கொரோனா தொற்று பரவல் சங்கிலியை உடைக்க ஊரடங்கு மட்டுமே ஒரே வழி என்பதால், மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்” என கூறினார்.