பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு இலவச கல்வி!
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
அதிலும் ஒரு சில குழந்தைகள் பெற்றோர்கள் இருவரையும் இழந்து தவித்து வருகின்றனர். அவர்கள் கல்விக்கு உதவ வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இது குறித்து, உத்தரப்பிரதேச துணை முதல்வர் தினேஷ் ஷர்மா தலைமையில், தனியார் பள்ளிகள் சங்கத்தினர் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு இலவசக் கல்வி வழங்க உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 2000-க்கும் அதிகமான தனியார் பள்ளிகள் முடிவு செய்துள்ளன. மேலும், இந்தக் குழந்தைகளிடமிருந்து ஒரு பைசாவும் கட்டணமாகப் பெறப்படாது என்றும், பாடப் புத்தகம், நோட்டு மற்றும் சீருடை ஆகியவையும் இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.