இந்தியாவில் இறங்கு முகத்தில் கொரோனா பாதிப்பு

இந்தியாவில், கடந்த சில மாதங்களாக கொரோனாவின் இரண்டாவது அலையின் பாதிப்பு அதிகமாக இருந்தது. தினசரி கொரோனா பாதிப்பு நான்கு லட்சத்தைக் கடந்து அச்சமூட்டும் வகையில் இருந்தது.

இந்நிலையில், பாதிப்பு அதிகமுள்ள பல மாநிலங்களில் ஊரங்கும் விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருவதால், தினசரி கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை சற்றே குறைந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 2,67,52,447

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 2,22,315

இதுவரை குணமடைந்தோர்: 2,37,28,011

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 3,02,544

கரோனா உயிரிழப்புகள்: 3,03,720

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 4,454

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 27,20,716

இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர்: 19,60,51,962

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *